வெங்காயத்தின் விலை தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
எதிர்வரும் நாட்களில், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் சில்லறை விலை, 700 ரூபாயாக அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் நேற்று (20) ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 520 ரூபாயாக அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி
இதேவேளை, நேற்று பல சில்லறை விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 600 முதல் 650 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா வெங்காய இறக்குமதிக்கு தடை விதித்துள்ள நிலையில் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியா தடை விதித்துள்ளது
இதேவேளை மொத்த சந்தையில் உள்ளூர் வெங்காயம் வரத்து இல்லாததால், இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை இவ்வாறு உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால் இந்தியாவில் வெங்காயத்தின் விற்பனை விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த வருடம் மார்ச் 31ஆம் திகதி வரை வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா அதிகாரபூர்வமாக தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
[
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |