அயர்லாந்தில் கேரள சிறுமி மீது கொடூர இனவெறி தாக்குதல்
அயர்லாந்தில் (Ireland), கேரளாவைச் (Kerala) சேர்ந்த இந்திய வம்சாவளி (India) சிறுமி மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ஒரு பகுதியான அயர்லாந்தில், இந்திய வம்சாவளியினர் மீது இனவெறித் தாக்குதல்கள் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கேரளாவைச் சேர்ந்த அனுபா அச்சுதன் என்பவர் அந்நாட்டில் தாதியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
அயர்லாந்து குடியுரிமை
கடந்த எட்டு ஆண்டாக அங்கு குடும்பத்துடன் வசித்து வரும் அனுபா, அயர்லாந்து குடியுரிமையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், வாட்டர்போர்டு நகரில் உள்ள அனுபாவின் வீட்டின் வெளியே அவரது ஆறு வயது மகள் நியா நவீன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
இதன்போது, அங்கு வந்த 12 முதல் 14 வயதுடைய சிறுவர்கள் சிலர் அவரை தாக்கி இனரீதியாகவும் கண்டபடி பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 11 ஆம் நாள் திருவிழா
