மிதிகமவில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு
மிதிகம பகுதியில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாகுவத்த - கங்கொட பிரதேசத்திலுள்ள வீட்டின் மீதே நேற்று (18) இரவு 11.40 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர் பதவி விலகல்கள்...! ஊழலற்ற ஆட்சி முழக்கத்திற்கு விழுந்த முதல் அடி - சிதைந்த அரசாங்கத்தின் பிம்பம்
காவல்துறையினர் விசாரணை
அத்துடன் குறித்த வீட்டில் இருந்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது தீ வைக்கவும் அவர்கள் முயற்சித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனினும், வீட்டிற்குச் சேதம் ஏற்பட்டுள்ளதாககாவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை 'மிதிகம லங்சி' என்பவர் வழிநடத்தியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிதிகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |