கொழும்பில் துப்பாக்கிச்சூடு - ஒருவர் சுட்டுக் கொலை!
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Dilakshan
கொழும்பில் வெல்லம்பிட்டி பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (28) இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 47 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை

குறித்த துப்பாக்கிச்சூடு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், கொலையாளிகளைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.