காலியில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி ஒருவர் பலி!
Galle
Sri Lanka
Gun Shooting
By Abi
காலியில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் காலி - டிக்சன் பகுதியில் இன்று (12.05.2026) காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், காரொன்றில் வந்த அடையாளம் தெரியாத நபரொருவர் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
இதனையத்து துப்பாக்கிதாரி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி