பயாகல துப்பாக்கிச்சூடு - தடயங்களை அழிக்க பைக்கிற்குத் தீ
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime
Gun Shooting
By Thulsi
பயாகலஇ கொஸ்ஹேன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்காக பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள், இன்று (01) காலை தொடங்கொட காவல்துறை பிரிவிற்குட்பட்ட எலதூவ பகுதியிலுள்ள இறப்பர் தோட்டமொன்றில் எரியூட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தொடங்கொட காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று (31) இரவு பயாகல பகுதியில் வீடொன்றிற்கு முன்னால் இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பாதாள உலகக் குழு உறுப்பினரான "பானந்துரே நிலங்க" என்பவரின் மைத்துனரான "டிலா" என அழைக்கப்படுபவர் ஆவார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 15