அநுர அரசின் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு
மாத்தறை (Matara) - வெலிகமவில் (Weligama) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இன்று (16.07.2025) அதிகாலை 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி, தாரக நாணயக்காரவின் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
இந்த, துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், வீட்டின் வாயிலை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டடுள்ளது.
கொலை மிரட்டல் காரணமாக குறித்த வழக்கறிஞருக்கு முன்னர் காவல்துறையினரால் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

