கட்டுநாயக்காவிற்கு வருகிறது சிங்கப்பூரின் உயர்மட்டகுழு
சிறிலங்கா விமான நிலையம் மற்றும் குடிவரவு(immigration) அமைப்புகள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்வதற்காக ஐந்து பேர் கொண்ட குழுவை இலங்கைக்கு அனுப்புவதற்கு சிங்கப்பூர் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ்(Tiran Alles) இன்று தெரிவித்தார்.
இலங்கையின் குடிவரவுச் சேவைகள் வளர்ச்சியடைய வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்திய அமைச்சர், சிங்கப்பூரின் தரத்திற்கு ஏற்றவாறு சிறிலங்கா விமான நிலையம் மற்றும் குடிவரவு அமைப்புகளை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை மதிப்பீடு செய்து வழங்குமாறு சிங்கப்பூர் அரசாங்கத்திடம்(Singapore government )கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.
விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும்
அதன்படி மே 27ஆம் திகதி இலங்கைக்கு ஒரு குழுவை அனுப்ப சிங்கப்பூர் அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்றார்.
குழுவானது எமது அமைப்புகளை மதிப்பீடு செய்து விரிவான அறிக்கையை எமக்கு சமர்ப்பிக்கும் என அமைச்சர் அலஸ் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் சிறந்த தொழில்நுட்பம்
"ஐரோப்பாவுடன் ஒப்பிடும்போது சிங்கப்பூரில் சிறந்த தொழில்நுட்பம் உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
பொருளாதார சவால்கள் காரணமாக அந்த நிலைகளை உடனடியாக நமது அமைப்பில் செயற்படுத்த முடியாமல் போகலாம். இருப்பினும், அறிக்கையின் அடிப்படையில், எங்களால் வாங்கக்கூடிய சில தொழில்நுட்பங்களை மாற்றியமைக்க முடியும்." என அமைச்சர் கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |