ஜனாதிபதி அநுரவின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

Sinhala and Tamil New Year Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka
By Thulsi Apr 14, 2026 03:26 AM GMT
Report

பிறந்துள்ள இந்தச் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய எனது மனப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பௌதீக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் மாற்றம் பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டானது, இந்நாட்டு மக்களின் பிரதான கலாசார விழாவாகும்.

புத்தாண்டு பிறக்கும் நேரம் மற்றும் கைவிசேடம் செய்ய உகந்த நேரம்

புத்தாண்டு பிறக்கும் நேரம் மற்றும் கைவிசேடம் செய்ய உகந்த நேரம்

சடங்குகளுக்கும் சமயக் கிரியை

பாரம்பரிய சம்பிரதாயங்களைப் பாதுகாத்து, சுபநேரச் சடங்குகளுக்கும் சமயக் கிரியைகளுக்கும் முன்னுரிமை அளித்து, கூட்டாக ஒரே சுபநேரத்தில் சிங்கள தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

ஜனாதிபதி அநுரவின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி | Sinhala Tamil New Year Wishes From President

இந்தப் பண்பாட்டுப் பகிர்வு உலகிற்கு முன்னால் எமது நாட்டின் அடையாளத்தையும், எமது சமூகங்களுக்கு இடையே நிலவும் சமூக-கலாசார பிணைப்பையும் சிறப்பாகப் பிரதிபலிக்கிறது.

நாட்டின் எதிர்கால அபிவிருத்திப் பாதையை, இந்த பெறுமதிமிக்க கலாசாரம் மற்றும் உன்னதமான வரலாற்று மரபுரிமைகளுடன் இணைந்தே தெரிவு செய்ய முடியும் என நாம் உறுதியாக நம்புகின்றோம்.

அதற்கமைய, எமது அனைத்து எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களும் அந்த பெறுமதியான மரபுரிமைகள் மற்றும் கலாசாரத்தின் மீது வலுவாக உருவாக்கப்பட்டுள்ளன என்பதை இங்கு நினைவுபடுத்த வேண்டும்.

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

வெளிப்புறச் சவால்

அதேபோல், சூரிய பெயர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அனைத்துச் சடங்கு முறைகளின் பொதுவான எதிர்பார்ப்பானது, கூட்டுப்பண்பை மதிக்கும், பிறரையும் இயற்கையின் இருப்பையும் கௌரவிக்கும் ஒரு புதிய மனிதனை உருவாக்குவதாகும்.

ஜனாதிபதி அநுரவின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி | Sinhala Tamil New Year Wishes From President

புத்தாண்டின் சடங்கு முறைகளில் வெளிப்படும் கூட்டுப்பண்பின் குணாதிசயங்களும் விழுமியங்களும் அந்த சில நாட்களுக்கு மாத்திரமன்றி, முழு வருடமும் எமது நடத்தைகளில் பிரதிபலிக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

கடந்த வருடம் முகங்கொடுத்த பாரிய இயற்கை அனர்த்தத்தின் போது உள்ளக அதிர்வுகளுக்கு தாக்குப் பிடிக்கும் இயலுமையை உலகிற்கு காண்பித்தோம்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தின் போர்ச் சூழல் நிலைமையில் ஏற்பட்டுள்ள வெளிப்புறச் சவால்களை வெற்றிகொள்வதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது.

வளமான நாடு - அழகான வாழ்க்கை

நாடென்ற வகையில் ஒன்றாக இந்த சவால்களை வெற்றிகொள்கையில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் வெளிப்படுத்தப்படும் கூட்டுப்பண்பு மற்றும் பகிர்ந்துகொள்ளல் போன்ற பண்புகளினால் , எமது வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என நான் அனைவரிடமும் கேட்டுக்கொள்கின்றேன்.

அடைந்த வெற்றிகளை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதோடு, எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியில் தளராது முன்னேறி, 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்பதை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு கைகோர்க்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதோடு, பிறந்துள்ள இந்தச் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய எனது மனப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஈரான் போரை அடுத்து மற்றொரு நாடு மீது படையெடுக்க தயாராகும் ட்ரம்ப்

ஈரான் போரை அடுத்து மற்றொரு நாடு மீது படையெடுக்க தயாராகும் ட்ரம்ப்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026