வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஆறு வாகனங்களை மோதித் தள்ளிய லொறி! வெளியான காணொளி
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் சிறிய லொறியொன்று ஆறு வாகனங்களைமோதி பாரிய விபத்து சம்பவத்தை ஏற்பட்டுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் குறித்த இடத்தில் சில மணி நேரம் போக்குவரத்துத் தடை ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் காத்தான்குடி காவல்துறைப்பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் இன்றைய தினம் நண்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
மட்டக்களப்பிலிருந்து காத்தான்குடி நோக்கிப் பயணித்த வந்த சிறிய லொறியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து பிரதான வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள் என்பவற்றை மோதியுள்ளது.
இதன்போது ஒரு லொறி உட்பட ஒரு முச்சக்கர வண்டி, நான்கு மோட்டார் சைக்கிள்கள் என்பன சேதமடைந்துள்ளன. மேலும் குறித்த லொறி வீதியோரத்தில் நின்ற மரத்தையும் சேதமாக்கியுள்ளது.
இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.