வாய்க்காலில் மூழ்கி ஆறு வயது சிறுவன் பலி - சங்கனையில் துயரம்
Death
Police
Manipay
SriLanka
Chankanai
By Chanakyan
குளத்திற்கு செல்லும் வாய்க்காலில் மூழ்கி ஆறு வயதுச் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மானிப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளளனர்.
சங்கானை - தேவாலய வீதியை சேர்ந்த சங்கானை ஸ்தான அ.மி.தக பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் நிறோஜன் ஸ்டீபன் (வயது-6) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
நேற்று மதியத்தில் இருந்து சிறுவனை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்ததையடுத்து அப்பிரதேசத்தில் மக்கள் தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இரவு 9.30 மணியளவில் குறித்த வாய்க்காலில் சிறுவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்