மூன்று நாட்களில் இலக்கை அடையவுள்ள சுங்கத் திணைக்களம்
இந்த வருடத்திற்கான தமது எதிர்பார்த்த வருமான இலக்கை இன்னும் 3 நாட்களுக்குள் எட்டிவிடும் என எதிர்பார்ப்பதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுங்கத் திணைக்கள வரலாற்றில் நாள் ஒன்றில் அதிகபட்சமாக வருமானம் கடந்த 6 ஆம் திகதி பதிவானதாக அதன் பணிப்பாளர் சந்தன புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
அன்றைய தினத்தில் மாத்திரம் 27.7 பில்லியன் ரூபாய் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
24.4 பில்லியன் ரூபாய்
அத்துடன் ஒக்டோபர் 15 அன்று அதிகபட்சமாக ஒரு நாள் வருமானத்தை ஈட்டியதாக குறிப்பிட்ட அவர் அப்போது சுங்கத்துறை 24.4 பில்லியன் ரூபாயைப் பெற்றதாக தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "இலங்கையில் ஒரு வரி வசூல் துறையால் ஒரே நாளில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச வருமானம் இதுவாகும்.
நவம்பர் 8 ஆம் திகதி நிலவரப்படி, சுங்கத்துறை மொத்தமாக 2,066.7 பில்லியன் ரூபாயை வசூலித்துள்ளது, ஆண்டுக்கு 2,115 பில்லியன் ரூபாய் (ரூ.2.115 டிரில்லியன்) வருவாய் ஈட்டியுள்ளது.
இந்த வேகத்தில், அடுத்த வாரம் புதன்கிழமைக்குள் முழு ஆண்டு வருமான இலக்கை அடையவும், அதன் பிறகு அதை முறியடிக்கவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |