சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை (Sri lanka) 2025 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் $768.2 மில்லியன் வருவாயை பெற்றுள்ளது.
இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பெறப்பட்ட வருவாயான $687.5 மில்லியனுடன் ஒப்பிடும்போது இது 11.7 சதவீதம் அதிகரிப்பாகும்.
குறித்த விடயத்தினை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (Sri Lanka Tourism Development Authority) வெளியிட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை
2024 ஆம் ஆண்டில் $3.17 பில்லியன் வருவாயை இலங்கை சுற்றுலாத்துறை ஊடாக பெற்றது. அது 2023ஆம் ஆண்டில் பெற்றப்பட்ட வருவாயான $2.07 பில்லியனுடன் ஒப்பிடும்போது 53.2 சதவீதம் அதிகரிப்பாகும்.
இந்த ஆண்டின் முதல் 72 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 15.3 சதவீதம் அதிகரித்துள்ளது. மார்ச் 13 வரை இலங்கைக்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 590,300 அதிகரித்துள்ளது.
முந்தைய ஆண்டை விட 38.1 சதவீதம் சுற்றுலாப் பயணிகளின் அதிகப்பையே இது காட்டுகிறது.
அமெரிக்க டொலர்கள்
இந்த ஆண்டு அரசாங்கம் 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகையை இலக்காக கொண்டு செயல்படுகிறது.
இந்த ஆண்டில் அரசாங்கம் நிர்ணயித்துள்ள 3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் ஈர்க்கும் திட்டங்களின் ஊடாக 4 முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாயாக வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 6 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்