மக்களுக்காக மருத்துவ துறையில் புரட்சிக்கு வித்திட்ட வைத்தியர் அர்ச்சுனா : தலை வணங்கும் ஈழத் தமிழ் பெண்
வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் மக்களாகிய எங்களுக்காக மருத்துவப் புரட்சியை செய்துள்ளார் என ஈழத்தைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டிருந்த பதிவிலேயே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்
“இன்று உலகமெல்லாம் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்ற சுவாரஸ்யமான, மதிப்புமிக்க, போற்றப்படத்தக்க விடயம் என்னவெனில் அது எங்களுடைய அன்புக்கும் மரியாதைக்குமுரிய வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா.
மருத்துவப் புரட்சி
அவருடை இந்த மருத்துவப் புரட்சி அழிந்து போகின்றதோ அல்லது தணிந்து போகின்றதோ அல்ல. காலகாலமாக கொழுந்து விட்டெரியப் போகின்றது. உலகத்திற்கே ஒரு வெளிச்சத்தை கொடுக்கவுள்ளது.
மக்களுக்காக செய்திருக்கின்ற மற்றும் எதிர்வரும் நாட்களில் செய்யப்போகின்ற உன்னதமான சேவைக்கு நன்றி என்ற ஒரு வார்த்தையால் கடந்துபோக முடியாது. மருத்துவத் துறையில் அவருடைய சேவைக்காக தலை வணங்குகின்றேன்.
உண்மையிலேயே இந்த புனிதமான தொழிலில் தொழிலை மதித்து அதன் தாற்பரியத்தை உணர்ந்து கடவுளுக்கு நிகராக உயிர் காக்கின்ற பணி செய்கின்றார்கள்.
கதைப்பதற்கான தைரியம்
இன்றைக்கும் எத்தனையோ வைத்தியர்கள் வணங்கப்பட வேண்டியவர்களாக எங்கள் கண்முன்னே இருக்கின்றார்கள். அந்த வரிசையில் இப்பொழுது வைத்தியர் அர்ச்சுனாவும் இருக்கின்றார்.
கடவுளுக்கும் நீதிக்கும் உண்மையான விடயங்களை கதைப்பதற்கான தைரியத்தை வைத்தியர் அர்ச்சுனா தந்திருக்கின்றார். மருத்துவத்தை விலை பேசுபவர்கள் இனிமேல் கவனமாக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.“ என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலும் பல விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |