கடற்றொழிலாளர் மீது துப்பாக்கிச்சூடு : கடற்படையினருக்கு சந்திரசேகர் பணிப்புரை

Trincomalee Sri Lanka Navy Sri Lanka Fisherman Ramalingam Chandrasekar
By Sathangani Jun 04, 2025 10:49 AM GMT
Report

திருகோணமலை (Trincomalee) - குச்சவெளி சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து கூடியவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்படையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் (Ramalingam Chandrasekar) குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி அறிக்கையை அடிப்படையாகக்கொண்டே சம்பவம் தொடர்பில் முடிவொன்றுக்கு வரமுடியும் எனவும், அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுக்க முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

குச்சவெளி துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக விசாரணை - பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் உறுதி

குச்சவெளி துப்பாக்கி பிரயோகம் தொடர்பாக விசாரணை - பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் உறுதி

கடற்படையினர் துப்பாக்கிச்சூடு

திருகோணமலை, குச்சவெளி கடற்பரப்பில் நேற்று (03.06.2025) சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் கடற்றொழிலாளர் மீது கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கடற்றொழிலாளர் மீது துப்பாக்கிச்சூடு : கடற்படையினருக்கு சந்திரசேகர் பணிப்புரை | Sl Navy Shoot A Fisherman In Trinco Chandrasekar

இது தொடர்பில் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையிலேயே சம்பவம் தொடர்பில் அமைச்சர் அறிக்கை கோரியுள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் சந்திரசேகர், ”சட்டவிரோத மீன்பிடி முறையானது கடலுக்கும், நாட்டுக்கும் கேடு விளைவிக்கும்.

கடற்றொழிலாளர் மீது துப்பாக்கிச்சூடு : றிஷாட் எம்.பி விடுத்துள்ள அவசர வேண்டுகோள்

கடற்றொழிலாளர் மீது துப்பாக்கிச்சூடு : றிஷாட் எம்.பி விடுத்துள்ள அவசர வேண்டுகோள்

 சட்டவிரோத மீன்பிடி

ஒரு சில கடற்றொழிலாளர்களின் வருமானத்துக்காக பெரும்பாலானவர்களின் வருமானம் இழக்கப்படுகின்றது. அதனால்தான் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுக்குமாறு கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர் மீது துப்பாக்கிச்சூடு : கடற்படையினருக்கு சந்திரசேகர் பணிப்புரை | Sl Navy Shoot A Fisherman In Trinco Chandrasekar

திருகோணமலை சம்பவம்கூட, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் ஏற்பட்டதெனக் கூறப்படுகின்றது. விசாரணைகளின் பின்னரே உண்மை என்னவென்பது தெரியவரும்.

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையும் தவறு, துப்பாக்கிச்சூடு நடத்துவதும் தவறு, அதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்குவதும் தவறு. எனவே, அறிக்கை கிடைத்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." என தெரிவித்தார்.

கடற்றொழிலாளர் மீது கடற்படை துப்பாக்கிப் பிரயோகம் : வீதிக்கு இறங்கிய மக்கள்

கடற்றொழிலாளர் மீது கடற்படை துப்பாக்கிப் பிரயோகம் : வீதிக்கு இறங்கிய மக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்