மட்டக்களப்பை தன்வசப்படுத்தியது தமிழரசுக்கட்சி : வெளியான இறுதி முடிவுகள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் இறுதி தேர்தல் முடிவுகள்
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான மட்டக்களப்பு மாவட்ட இறுதி தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 96,975 வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி (NPP) 55, 498 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 40,139 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி (TMVP) 31,256 வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில் எந்தவொரு ஆசனங்களையும் கைப்பற்றவில்லை.
2020 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்
இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை இலங்கைத் தமிழரசுக் கட்சி பெற்றுக் கொண்டது.
இதன்படி, இலங்கைத் தமிழரசுக் கட்சி 79,460 வாக்குளையும் 02 ஆசனங்களையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிகொண்டது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் 67,692 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 1 ஆசனத்தை மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி கொண்டனர்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் 34,428 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளனர்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் 33,424 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு - கல்குடா தேர்தல் முடிவுகள்
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 27,734 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 14227 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி (TMVP)12250 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 11,981
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 7350 வாக்குகளைப் பெற்றுள்ளது.
மட்டக்களப்பு - மட்டக்களப்பு தேர்தல் முடிவுகள்
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 36,146வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 34,266 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 31,760 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி (TMVP)10,376 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 5368 வாக்குகளைப் பெற்றுள்ளது.
பட்டிருப்பு தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 15,007வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு (DTNA) 8684 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 7948 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 7490 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 6044 வாக்குகளைப் பெற்றுள்ளது.
மட்டக்களப்பு தபால் மூல வாக்கு முடிவு
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, இலங்கை தமிழரசுக் கட்சி(ITAK) 5,236 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி கட்சி (NPP) 3,412 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலை புலிகள்(TMVP)1,383 வாக்குகளைப் பெற்றுள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்(SLMC) 1,019 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி (DTNA) 966 வாக்குகளைப் பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி(SJB) 914 வாக்குகளைப் பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |