முன்மாதியான இஸ்லாமிய சமூகம்! அபாயகரமான சூழலை நோக்கி நகரும் தமிழர் வாழ்வியல்
போருக்குப் பிந்தைய பாதிப்புகள், பொருளாதார நெருக்கடி மற்றும் கூட்டுக் குடும்ப அமைப்பின் சிதைவு ஆகியவற்றால் தமிழ் சமூகத்தில் உளநலப் பிரச்சினைகள், மற்றும் போதைப்பொருள் பாவனை என்பன அபாயகரமான முறையில் அதிகரித்து வருவதாக உள மருத்துவ நிபுணர் பேராசிரியர் தயா சோமசுந்தரம் எச்சரித்துள்ளார்.
ஐ.பி.சி தமிழ் ஊடகத்துக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்காலத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் கடுமையான பொருளாதார மற்றும் உணர்ச்சி ரீதியான அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும், குறிப்பாக, பெற்றோர்களின் பணிச்சுமை காரணமாகப் பிள்ளைகளுடன் செலவிடும் தரமான நேரம் குறைந்து வருவதும், அளவுக்கதிகமான கல்வி மற்றும் பரீட்சை அழுத்தங்களும் இளையோரைத் தவறான முடிவுகளுக்குத் தூண்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இஸ்லாமிய மற்றும் கத்தோலிக்க சமூகங்களில் காணப்படுவது போன்ற வலுவான மதக் கட்டமைப்புகள், சமூக ஒற்றுமை மற்றும் சிறு வயதிலிருந்தே விழுமியங்களை ஊட்டி வளர்க்கும் முறை ஆகியவை தவறான உயிர்மாய்ப்பு எண்ணங்களைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் ஒப்பிட்டு விளக்கினார்.
உளநலப் பிரச்சினைகளை வைத்தியர்களால் மட்டும் தனித்துத் தீர்க்க முடியாது எனக் குறிப்பிட்ட பேராசிரியர், இதற்காகப் பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகத் தலைவர்கள், கலைஞர்கள் மற்றும் ஊடகங்கள் ஒன்றிணைந்த பல்துறை சார்ந்த அணுகுமுறை உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதோடு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
[HI5CJFS ]
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |