கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இலங்கை பயணி கைது
சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ரூ. 6.5 மில்லியன் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் இலங்கை விமானப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை இன்று காலை (26.04.2026) கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் காலி பகுதியைச் சேர்ந்த 22 வயது தொழிலதிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஏர்வேஸ் விமானம் EY - 396
மேலும், சந்தேக நபர் இன்று காலை (26) 03.30 மணிக்கு எதிஹாட் ஏர்வேஸ் விமானம் EY - 396 மூலம் அபுதாபியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்துள்ளார்.

விமான நிலையத்தின் பசுமை வழி ஊடாக வெளியேற முயன்ற போது, சுங்கப் பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் அவர் சோதனையிடப்பட்டார்.
இதன்போதே, சந்தேகநபர் கொண்டு வந்திருந்த 6 பயணப் பைகளில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 40,000 மான்செஸ்டர் சிகரெட்டுகள் (Manchester cigarettes)அடங்கிய 200 சிகரெட் அட்டைப்பெட்டிகளும், 32 மின்னணு சிகரெட்டுகளும் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளும் மேலதிக விசாரணைக்காக இன்று (26) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுப்படவுள்ளன.
நாணய சுழற்சியை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ஜி.டி அணி - இன்றைய போட்டியை தனதாக்கி கொள்ளுமா சி.எஸ்.கே
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்