விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்படவுள்ள எஸ்.பி. திஸாநாயக்க : வெளியாகியுள்ள தகவல்!
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினரான எஸ்.பி. திஸாநாயக்க விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விளையாட்டுத்துறை, இளைஞர் விவகாரங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக செயற்படும் ரொஷான் ரணசிங்கவிடம் இருந்து விளையாட்டுத்துறை அமைச்சு பறிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான விவாதம் நிறைவடைந்ததை தொடர்ந்து, எதிர்வரும் ஜனவரி மாதம் இந்த மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர்
இந்த நிலையில், தமக்கு வழங்கப்படும் விளையாட்டுத்துறை அமைச்சு பதவியை ஏற்க தயாராக இருப்பதாக எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமக்கு குறித்த பதவி வழங்கப்பட்டால் மாத்திரம் அதனை ஏற்றுக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், விளையாட்டுத்துறை அமைச்சு தமக்கு வழங்கப்படுமாயினும், அதனுடன் கல்வி அமைச்சும் வழங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எஸ்.பி. திஸாநாயக்க விளையாட்டுத்துறை அமைச்சு பதவியை ஏற்கனவே வகித்துள்ளதோடு, அவரது பதவிக் காலத்தில் விளையாட்டுத்துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |