கெஹெலியவை இரகசியமாக சந்திக்கும் மொட்டுக் கட்சியினர்
விளக்கமறியலில் இருக்கும் கெஹலிய ரம்புக்வெல்லவை மொட்டுக் கட்சியின் அரசியல்வாதிகள் படையெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் தரமற்ற தடுப்பு மருந்துகளை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சுகவீனம் காரணமாக அவர் தற்போது சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கெஹலிய ரம்புக்வெல்ல
இந்நிலையில் மொட்டுக் கட்சியின் கண்டி மாவட்ட அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் குழுக்களாக ஒன்று சேர்ந்து சிறைச்சாலைக்கு வந்து கெஹெலியவைப் பார்வையிட்டுச் செல்வதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பார்வையிட வந்தவர்களில் பிரதேச தொடக்கம், முன்னாள் மாகாண சபை மற்றும் நாடாளுமன்றத்தின் முன்னாள் , இந்நாள் உறுப்பினர்கள் பலரும் இதில் உள்ளடங்கியுள்ளனர் என கூறப்படுகின்றது.
அதேவேளை, மொட்டுக் கட்சியின் முக்கிய தகவலொன்றுடன் ராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் அண்மையில் கெஹெலியவைச் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |