மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரின் சகோதரர் கைது!!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Kanna
நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவின் சகோதரரும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினருமான ஜகத் சமந்த கைது செய்யப்பட்டுள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்
ஆராச்சிக்கட்டுவவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 17ஆம் திகதி நபர்களைத் தாக்கியமை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தின் சிசிடிவி கமராவில் பதிவான இந்த சம்பவம் ஜூன் மாதம் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளராக இருந்த ஜகத் சமந்த, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த நபர்களை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி