போர் முடிவுக்கு: நாளை திறக்கப்படும் ஹோர்முஸ் நீரிணை..! கையெழுத்திட்ட ட்ரம்ப்
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் தரப்பு இடையே ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தத் தகவலை அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி. (AFP) செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்னணு முறையில் (e-signature) அதிகாரப்பூர்வமாகப் கையெழுத்திடப்பட்டதை ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, உறுதி செய்துள்ளார்.
எண்ணெய் வர்த்தகத் தடை
ஹோர்முஸ் நீரிணை நாளை முதல் முழுமையாக திறக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்அறிவித்துள்ளார்.
🚨 President Donald J. Trump has SIGNED the Iran Memorandum of Understanding at Versailles in France. 🇺🇸 pic.twitter.com/JQ6qlbvFAF
— The White House (@WhiteHouse) June 17, 2026
கடந்த மூன்று மாதங்களாக மூடிக்கிடந்த இந்த கடல்வழிப் பாதையில், போர் ஏற்படுவதற்கு முந்தைய நிலை விரைவில் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளநிலையில், ஈரான் மீதான எண்ணெய் வர்த்தகத் தடைகளை நீக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.
இதன் மூலம் ஈரான் தனது மசகு எண்ணெய் மற்றும் எரிபொருட்களை எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி விற்கலாம். அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் மீண்டும் தொடங்கியதால் மசகு எண்ணெய் விலை சரியத்தொடங்கியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |