அவசரமாக கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ள மொட்டுக்கட்சி உறுப்பினர்கள்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவை (Sri Lanka Podujana Peramuna) பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அமைப்பாளர்களும் கொழும்புக்கு (Colombo) அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) இது தொடர்பான அழைப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் முற்பகல் 10.45 மணியளவில் நெலும் மாவத்தையில் (Nelum Mawatha) உள்ள கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு
எதிர்வரும் அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் நோக்கம் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் (Ranil Wickremesinghe) முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கும் (Basil Rajapaksa) இடையில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.
அதிபருக்கும் பசில் ராஜபக்சவிற்கும் இடையில் தற்போதைய அரசியல் நிலமைகள் தொடர்பில் கடந்த சனிக்கிழமை (04) பிற்பகல் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.
தலைமையகத்திற்கு வந்த சந்திரிக்கா
இதேவேளை, 05 வருடங்களின் பின்னர் முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (Chandrika Kumaratunga) கலந்துரையாடலுக்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு வந்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (06) பிற்பகல் நடைபெற்ற இது தொடர்பான கலந்துரையாடலில் அமைச்சர் மகிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் சுரேஷ் ராகவன், நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க உள்ளிட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |