அரச பேருந்து சாரதி அதிரடியாக கைது
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Srilanka Bus
By Sumithiran
குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக இலங்கை போக்குவரத்து சபையின்(SLTB) பேருந்து ஓட்டுநர் ஒருவர் நுவரெலியாகாவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பேருந்து வெலிமடையிலிருந்து நீர்கொழும்புக்கு பயணித்துக் கொண்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் மது போத்தல்கள்
ஓட்டுநர் கைது செய்யப்பட்டபோது, ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் மது போத்தல்கள் காணப்பட்டதாக பொலிஸார் காவல்துறையினர் தெரிவித்தனர்
திவுலபிட்டிய டிப்போவைச் சேர்ந்த குறித்த பேருந்து, வேறொரு ஓட்டுநர் மற்றும் நடத்துனரைப் பயன்படுத்தி அதன் இலக்குக்கு அனுப்பப்பட்டது.
கைது செய்யப்பட்ட ஓட்டுநர் நாளை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்