ஆயுதமுனையில் மிரட்டப்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்
மட்டக்களப்பில் நிகழ்கின்ற பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்ததற்கு கூலியாக உயிரச்சுறுத்தலை ஆயுதம் தாங்கிய மர்மக் குழு மூலமாக பெற்றுள்ளதாக மட்டக்களப்பின் சமூக செயற்பாட்டாளர் லவக்குமார் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (03) மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார்.
"சமூக சேவை என்று தேவையற்ற விடயங்களில் தலையிடுவதனை தவிர்த்துக்கொள்ளுமாறும் அதிலும்குறிப்பாக தீவுச்சேனை விவகாரத்தினை மேற்கோள் காட்டி எச்சரித்த அவர்கள், இவ்வாறான செயற்பாடுகளை இனியும் தொடர்ந்தால் உயிரை இழக்க நேரிடும்" என எச்சரித்து சென்றதாக அவர் தெரிவித்தார்.
கறுப்பு நிற ஆடை, கறுப்பு நிற கையுறைகளுடன், முகமூடியணிந்து ஆயுதம் தாங்கிய நிலையில் 03 மோட்டார் சைக்கிள்களில் அறுவர் வீடு தேடி வந்து மிரட்டியதாக அவர் மேலும் கூறினார்.
இது தொடர்பாக மேலும் அவர் தெரிவித்தது,