எரிவாயு விநியோகத் தடைகளுக்கு விரைவில் தீர்வு : வெளியான அறிவிப்பு
நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு விநியோகத் தடைகள் விரைவில் தீர்க்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, அன்றாடத் தேவையைவிட அதிகளவிலான சமையல் எரிவாயு கொள்கலன்களைச் சந்தைக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் நாட்களில் நாளொன்றுக்கு 80,000 முதல் 100,000 வரையான சமையல் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு தட்டுப்பாடு
இதன் மூலம் நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகத் தடைகள் விரைவில் சீரடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக லிட்ரோ சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
3,500 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிவந்த கப்பல் தாமதமாக வந்தமையே இந்தத் தட்டுப்பாட்டுக்குக் காரணம் என நிறுவனத்தின் தலைவர் தெரிவித்திருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |