மின்சார நெருக்கடிக்கு தீர்வு காண மாற்று யோசனை
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்சார விநியோக நெருக்கடிக்குத் தீர்வாக தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான யோசனையை இன்றை அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கை மின்சார சபை, திங்கட்கிழமை முதல் அடுத்த வாரத்திற்கான எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் (ஐ.ஓ.சி) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாக அமைச்சர் தெரிவித்தார்
இந்திய எண்ணெய் நிறுவனத்தினூடாக (ஐ.ஓ.சி) இன்றும் நாளையும் (01) இலங்கை மின்சார சபை நேரடியாக எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என குறிப்பிட்டார்.
அடுத்த வாரத்துக்கு மின்சார சபைக்கு தேவையான எரிபொருள் தொடர்பில் இன்றைய தினம் தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.
துண்டிப்பின்றி மின்சார விநியோகத்தை முன்னெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
