ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் சோரம் போயுள்ள வடக்கு கிழக்கிலுள்ள சில தமிழ் கட்சிகள்!
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தின் ஊடாக சர்வதேச குற்றவியல் விசாரணை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சமர்க்கப்பட்டுள்ள அறிக்கை நீர்த்துப் போகச் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே செல்வராசா கஜேந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய தமிழ் கட்சிகள், ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் சோரம் போயுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச சமூகத்தை குற்றம் சுமத்த முடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் விழிப்படைந்து ஒருமித்த குரலுடன் சர்வதேசத்தை நோக்கி ஓடும் போது இந்த பூகோள போட்டியில் வெற்றிப் பெற முடியும் எனவும் செல்வராசா கஜேந்திரன், நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.