தெற்கு மற்றும் மேல் மாகாணங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள எச்சரிக்கை
நாடு முழுவதும் நிலவிவரும் சீரற்ற வானிநிலை காரணமாக 13 மாவட்டங்களில் 20,480 குடும்பங்களைச் சேர்ந்த 75, 734 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தினால் 33,488 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மோசமான வானிலை காரணமாக 13 வீடுகள் முழுமையாகவும் 1,125 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட 555 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவு எச்சரிக்கை
இதேவேளை, தெற்கு மற்றும் மேல் மாகாணங்களில் பல பகுதிகளில் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை மூன்றாம் கட்டத்துக்கு உயர்த்தியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவித்துள்ளது.
இதன்படி காலி மாவட்டத்தில் எல்பிட்டிய, இமதுவ, நாகொட, யக்கலமுல்ல, களுத்துறை மாவட்டத்தில் இங்கிரிய, வலலவிட்ட, மத்துகம, மாத்தறை மாவட்டத்தில் பிடபெத்தர, அக்குரஸ்ஸ, ஹக்மன ஆகிய நான்கு பகுதிகளும், மக்கள் வெளியேற்றப்பட வேண்டிய பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.