இஸ்ரேலுக்கு எதிராக தென்னாபிரிக்கா தொடுத்த வழக்கின் தீர்ப்பு இன்று
இஸ்ரேலுக்கு எதிராக தென்னாபிரிக்கா தொடுத்த இனப்படுகொலை வழக்கு இன்று சர்வதேச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலை மற்றும் இராணுவ தாக்குதல்களை நிறுத்துமாறு தென்னாபிரிக்காவினால் கோரப்பட்டமை தொடர்பில் இந்த வழக்கு விசாரணையின் போது ஆராயப்படவுள்ளது.
காசா மீதான தாக்குதலில் இனப்படுகொலை செய்ததாக குற்றஞ்சாட்டி, தென்னாப்பிரிக்கா இஸ்ரேல் மீது வழக்கு தாக்கல் செய்தது.
இஸ்ரேலுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29 ஆம் திகதி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேலுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை ஒன்றையும் தென்னாப்பிரிக்கா சமர்ப்பித்துள்ளது.
இந்த நிலையில், குறித்த வழக்கு இன்று சர்வதேச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்த வழக்கு விசாரணைகளின் நிறைவில், இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் குறித்து சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதிகள் குழாமினால் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |