திடீரென பல நூறு அடிகள் கீழிறங்கிய விமானம்: மயிரிழையில் தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து
அமெரிக்காவின் (America) ஹவாய் மாகாணத்தின் ஹொனலுலுவில் இருந்து லிஹூ பகுதிக்கு புறப்பட்ட Southwest ஏர்லைன்ஸ் விமானமொன்று பாரிய விபத்தில் இருந்து மயிரிழையில் தப்பியுள்ளது.
குறித்த சம்பவம் கடந்த மார்ச் மாதம் நிகழந்திருந்தாலும் தற்போது தகவல் வெளியாகி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
தரையிறங்கும் நடவடிக்கை
அதன்போது, தரையிறங்கும் நடவடிக்கைகள் வலுக்கட்டாயமாக கைவிடப்பட்டதையடுத்து சில நொடிகளுக்குள் அந்த விமானம் பல நூறு அடிகள் கீழிறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த சம்பவம் வழக்கத்துக்கு மாறாக மிகவும் வேகமாக நடந்ததாகவும் கடல் மட்டத்தில் இருந்து வெறும் 400 அடிக்கு அந்த விமானம் கீழிறங்கியதாகவும் கூறப்படுகிறது.
விசாரணைகள்
எவ்வாறாயினும், சுதாரித்துக்கொண்ட விமானிகள் துரித நடவடிக்கையால் விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் அமெரிக்காவின் FAA அமைப்பால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |