நாட்டில் இடம்பெறும் தொடர் கொடூரங்கள்: காவல்துறையினர் வெளியிட்ட விசேட அறிக்கை
ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதுவரை 83 பேர் கொலைகள் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மற்றும் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு இன்று (26) கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வீடுகளை உடைத்தல் மற்றும் சொத்துக்களை திருடுதல் போன்ற 1,180 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், 310 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்
இந்நிலையில், இவ்வாறான குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரை 20 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பான சுமார் 10 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |