பேருந்து சாரதிகள் செய்யும் தவறுகளை தெரிவிப்பதற்கு விசேட செயலி
Sri Lankan Peoples
By Vanan
பேருந்து சாரதிகள் செய்யும் தவறுகளை தெரிவிப்பதற்கு விசேட செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை வலியுறுத்தியுள்ளது.
சாரதிகள் செய்யும் தவறுகளை நேரடியாக பயணிகளுக்கு தெரிவிக்க முடியும் என விபத்து விசாரணை முகாமையாளர் எரந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
திறமையின்மை புத்தகம்

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சாரதிகள் செய்யும் தவறுகளை ஆவணப்படுத்தும் வகையில் சாரதிகளுக்கு திறமையின்மை புத்தகம் ஒன்றை அறிமுகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.
இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 218 பேருந்து விபத்துக்கள் வருடத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் எரந்த பெரேரா தெரிவித்தார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி