நாட்டில் சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டம்
Sri Lanka
Ministry of Health Sri Lanka
By Dharu
நாட்டில் எதிர்வரும் 8, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் சிறப்பு டெங்கு ஒழிப்புத் திட்டத்தைச் செயல்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி, இந்தத் திட்டம் 14 மாவட்டங்களில் உள்ள 74 சுகாதார மருத்துவ அலுவலர் (MOH) பிரிவுகளில் செயல்படுத்தப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த முயற்சிக்கு காவல்துறை மற்றும் முப்படைகளின் உதவி பெறப்படும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.
அடையாளம் காணப்பட்ட பகுதி
டெங்கு பரவும் அபாயம் அதிகமாக உள்ளதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்குச் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

நுளம்புகள் இனப்பெருக்கம் செய்வதற்கு உகந்த சூழலைப் பராமரிக்கும் நபர்கள் மீது சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
பேராசிரியர் ரவீந்திரநாத் கொலையை நேரில் கண்ட சாட்சியம்! பிள்ளையானுக்கு எதிராக தயாராகும் குற்றப்பத்திரிகை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்