இலங்கைக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புதல் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்
Money
Sri lanka
Central Bank of sri lanka
By S P Thas
ஏற்றுமதி வருமானத்தை மாற்றுவதற்கான விதிகள், தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குப் பொருந்தாது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் அண்மையில் வெளியிடப்பட்ட மீள் அனுப்புதல் மற்றும் ஏற்றுமதி வருமானத்தை இலங்கை ரூபாவாக மாற்றுவது தொடர்பான விதிகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முறையான வழிகளில் வருமானத்தை அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது நிதியை எந்தவொரு வணிக வங்கியிலும் வெளிநாட்டு நாணயமாகவே பேணலாம் என அறிக்கை ஒன்றினை வெளியிட்டு மத்திய வங்கி அறிவித்துள்ளது.
ஏற்றுமதி வருவாயை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கான விதிகள் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்களின் பண அனுப்புதல்களுக்குப் பொருந்தாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி