இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயங்களுக்கு விசேட வரி விதிப்பு
Government Of Sri Lanka
Ministry of Finance Sri Lanka
By Kanna
இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயங்களுக்கு விசேட பண்ட வரியை நிதியமைச்சு விதித்துள்ளது.
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் கிலோவொன்றுக்கு 50 ரூபா விசேட பண்ட வரியாக நிதியமைச்சு விதித்துள்ளது.
கடந்த 23 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த விசேட பண்ட வரி எதிர்வரும் 3 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
நிதி அமைச்சின் உத்தரவு
மேலும், உப்பு இறக்குமதியின்போது, கிலோவொன்று விதிக்கப்படும் 40 ரூபா விசேட பண்ட வரியிலிருந்து 10 ரூபா வசூலிக்கப்பட வேண்டும் என்றும், எஞ்சிய தொகையை ஔடத ஒழுங்குபடுத்த அதிகாரசபையின் கீழ் பதிவு செய்யப்பட்ட வணிக நோக்கமன்ற மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் நிதி அமைச்சு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்