நீண்ட விடுமுறையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்
Sri Lanka
Railways
Srilanka Bus
By Sathangani
விசேட போக்குவரத்துச் சேவைகளை மேற்கொள்ள போக்குவரத்து அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட வார விடுமுறைக்காக கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (13) முதல் விசேட போக்குவரத்துச் சேவைகள் இடம்பெறவுள்ளன.
இதற்காக 60 மேலதிக பேரூந்துகள் இன்று முதல் சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை (SLTB) தெரிவித்துள்ளது.
மேலதிக பேருந்துகள்
கால அட்டவணையின்றி மேலதிக பேருந்துகளை இயக்கவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திட்டமிட்டுள்ளது.

இதேவேளை இன்று (13) மற்றும் நாளை (14) காலை பதுளையில் (Badulla) இருந்து கொழும்பு (Colombo)நோக்கி விசேட தொடருந்தை இயக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்