பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவை
சிங்கள - தமிழ் புத்தாண்டு மற்றும் ரமழான் பண்டிகைகளை முன்னிட்டு விசேட பொது போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.
குறித்த விசேட போக்குவரத்து சேவையானது ஏப்ரல் 5ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போக்குவரத்து சேவை
இலங்கை போக்குவரத்து சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, தொடருந்து திணைக்களம் மற்றும் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எழுத்து மூலம் இதனை அறிவித்துள்ளார்.
பண்டிகை நாட்களில் கொழும்பில் இருந்து கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்கு கொழும்பு மத்திய பேருந்து நிலையம் மற்றும் பெஸ்டியன் மாவத்தை தனியார் பேருந்து நிலையம் ஆகியவற்றிலிருந்து பேருந்து சேவைகள் இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |