இலங்கையில் சிறப்பு பல்கலைக்கழகங்களை நிறுவ வேண்டும் : குகதாசன் எம்.பி கோரிக்கை

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Education ITAK
By Sathangani Dec 06, 2024 09:45 AM GMT
Report

இலங்கை விவசாய துறை, கடற்தொழில் துறை மற்றும் கைத்தொழில் துறை முதலியவற்றில் நீண்ட தூரம் வளர்ச்சி காண வேண்டியுள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan) தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த துறைகளில் மேம்பாடு அடைய வேண்டுமாயின் இத்துறைகளுக்கு என தனித்தனியான சிறப்பு பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றைய (05) நாடாளுமன்ற அமர்வில் அவரது முதலாவது உரையை ஆற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ”ஊழலற்ற, இனவாதமற்ற, மதவாதமற்ற மற்றும் வெளிப்படைத்தன்மையான ஒரு ஆட்சியை நடத்த உள்ளதாக ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். எனவே ஜனாதிபதி கூறியவாறான ஆட்சியை சொல்லில் மட்டுமின்றி இந்த அரசு செயலிலும் காட்ட வேண்டும்.

கோபா குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு : சபைத் தலைவர் அறிவிப்பு

கோபா குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு : சபைத் தலைவர் அறிவிப்பு

 அரச சேவையினை மாற்றுதல்  

மேலும் அரச சேவையினை வினைத்திறன் உள்ளதாக மாற்றப் போவதாகவும் சட்ட ஆட்சியை நிலைநாட்டப் போவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அரச சேவையினை உலகத்தரத்திற்கு உயர்த்தினால் தான் இந்த நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியும்.

இலங்கை சுதந்திரம் அடைந்த பொழுது 139 குடிமக்களுக்கு ஓர் அரச ஊழியர் இருந்தார், இன்று 13 பேருக்கு ஓர் அரச ஊழியர் காணப்படுகின்றார் என கூறப்படுகின்றது. எனவேதான் அரச சேவையினை ஒழுங்குபடுத்தி மீளமைக்க வேண்டும்.

இலங்கையில் சிறப்பு பல்கலைக்கழகங்களை நிறுவ வேண்டும் : குகதாசன் எம்.பி கோரிக்கை | Special Universities Should Be Established In Sl

அதேபோன்று வேளாண்மை துறை, கடற்தொழில்துறை மற்றும் கால்நடை வளர்ப்பு துறை ஆகியவற்றில் மேம்பாடு அடைய வேண்டுமாயின் இத்துறைகளுக்கு என தனித்தனியான சிறப்பு பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட வேண்டும்.

எமக்கு அயலில் உள்ள இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழகம் விவசாயத்துறை மேம்பாட்டிற்கு ஆற்றிவரும் பணி அளப்பரியது என்பதனை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அதேபோன்ற பல்கலைக்கழகங்கள் இந்த நாட்டிலும் உருவாக்கப்பட வேண்டும்.

அதேபோல கணனி தொழில்நுட்பத் துறை மேம்பாட்டுக்கு தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகமும், ஐஐடி என்று அழைக்கப்படுகின்ற இந்திய தொழில்நுட்ப நிறுவனமும் ஆற்றி வரும் பணிகளையும் நாம் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

பட்டம் பெற்றுள்ளீர்கள் என்பதை நிரூபியுங்கள்: சபாநாயகருக்கு மகிந்த தேசப்பிரிய சவால்

பட்டம் பெற்றுள்ளீர்கள் என்பதை நிரூபியுங்கள்: சபாநாயகருக்கு மகிந்த தேசப்பிரிய சவால்

ஆசிரியர் பற்றாக்குறை

ஜனாதிபதி கூறியபடி கல்வித்துறையினை மேம்படுத்த வேண்டுமாயின் கற்றல் கற்பித்தல் முறைகளில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டிய தேவை உள்ளதுடன் ஆசிரியர் பணிக்கு ஆட்சேர்க்கும் முறையிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

இலங்கையில் சிறப்பு பல்கலைக்கழகங்களை நிறுவ வேண்டும் : குகதாசன் எம்.பி கோரிக்கை | Special Universities Should Be Established In Sl

திருகோணமலை மாவட்டத்தில் 166 தொடக்க கல்வி ஆசிரியர் பற்றாக்குறையும் 116 கணித ஆசிரியர் பற்றாக்குறையும் 53 ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையும் 52 கணினி ஆசிரியர் பற்றாக்குறையும் 60 அறிவியல் ஆசிரியர் பற்றாக்குறையும் 53 தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையும் என ஆக மொத்தம் 500 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதனால் மாணவர்களது கல்வி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்கு போதிய ஆசிரிய ஆளணியை மாவட்டத்திற்கு ஒதுக்கித் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இப்பொழுது உள்ள முறையில் ஆசிரியர் வளப்பங்கீடு சரியான முறையில் அமையவில்லை. ஆசிரியர் நியமனத்தின் பொழுது பெரும்பாலான ஆசிரியர்கள் திருகோணமலைக்கு வருகின்றார்கள், வந்து சில காலங்களில் தத்தமது மாவட்டங்களுக்கு இடமாற்றம் பெற்றுக் கொண்டு சென்று விடுகின்றார்கள்.

இந்த சிக்கலை தீர்ப்பதற்கு கல்வியற் கல்லூரிக்கு அனுமதி வழங்கும் பொழுது பிரதேச செயலாளர் மட்டத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு அவ்வவ் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்தால் இந்த சிக்கலை தீர்க்கலாம்.

மொட்டுக்கட்சியின் செயலாளரின் கைது அரசியல் பழிவாங்கலே : சாகர பகிரங்கம்

மொட்டுக்கட்சியின் செயலாளரின் கைது அரசியல் பழிவாங்கலே : சாகர பகிரங்கம்

 கல்வி அமைச்சு பின்பற்றுதல்

உள்நாட்டு அமைச்சு கிராம அலுவலர்களை நியமிக்கும் பொழுது பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள வெற்றிடங்களுக்கு அவ்வவ் பிரதேச செயலாளரின் பிரிவுகளில் உள்ளவர்களையே நியமிக்கின்றது. இதே முறையை கல்வி அமைச்சும் பின்பற்றினால் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு காணலாம்.

மேலும் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை. கல்வித்துறைக்கு 2023 ஆம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் 1.3 வீதமான நிதியும் 2024இல் 1.5 வீதமான நிதியுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைக் குறைந்தது 5 வீதமாக ஆவது உயர்த்த வேண்டும்.

இலங்கையில் சிறப்பு பல்கலைக்கழகங்களை நிறுவ வேண்டும் : குகதாசன் எம்.பி கோரிக்கை | Special Universities Should Be Established In Sl

மேற்குலக நாடுகள் தமது வரவு செலவுத் திட்டத்தில் 5 வீதத்துக்கும் கூடுதலான தொகையினை கல்விக்கு ஒதுக்குகின்றன என்பதனையும் தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

முன்னுரைத்தவாறு ஜனாதிபதி பல்வேறு விடயங்கள் பற்றி குறிப்பிட்டிருந்தாலும், நீண்ட காலமாக இந்த நாட்டில் புரையோடிப் போய் உள்ள இனச் சிக்கலுக்கு தீர்வு காணும் பொருட்டான முன்மொழிவுகள் எதனையும் அவர் முன்வைக்கவில்லை என்பது கவலை தோய்ந்த செய்தியாகும்.

“சொல்லாமலே செய்வர் பெரியார் “ என்னும் முதுமொழிக்கு அமைய ஜனாதிபதி இச்சிக்கலுக்கு ஒரு நிலையான தீர்வினை காண்பார் என்ற நம்பிக்கை இருக்கின்றது.” என தெரிவித்தார்.

மதுவரி அனுமதிப் பத்திரங்களை வழங்குவது குறித்து அநுர விடுத்துள்ள பணிப்புரை

மதுவரி அனுமதிப் பத்திரங்களை வழங்குவது குறித்து அநுர விடுத்துள்ள பணிப்புரை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
மரண அறிவித்தல்

மூதூர், காந்திநகர்

15 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Truganina, Australia

07 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்