இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விரைந்த சிறப்பு மருத்துவர் குழு
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டு பதுளை மாவட்டத்தில் உள்ள “சுரக்சா” முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சேவைகளை வழங்குவதற்காக இந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்த ஐந்து சிறப்பு மருத்துவர்கள் குழு நேற்று (23) இலங்கைக்கு வருகை தந்தது.
சுற்றுலா துணை அமைச்சர் ருவான் ரணசிங்கவின் அழைப்பின் பேரில் இந்தக் குழு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவ கிளினிக்குகள்
இந்த மருத்துவர்கள் கலந்து கொள்ளும் மருத்துவ கிளினிக்குகள் இன்று (24) மற்றும் நாளை (25) நடைபெற உள்ளன.

இந்த நிகழ்ச்சியில் இலங்கை மருத்துவர்கள் உட்பட மொத்தம் 25 பணியாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் சென்னையிலிருந்து இண்டிகோ விமானம் 6E-1179 மூலம் சிறப்பு மருத்துவர்கள் குழு நேற்று (23) மாலை 4.15 மணிக்கு கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |