திடீர் குண்டு வெடிப்பு: விமானப்படை வீரர் ஒருவர் பலி
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Air Force
By Dhilak
கல்பிட்டி கந்தகுளிய விமானப்படை பயிற்சி நிலையத்தில் திடீர் குண்டு வெடிப்பினால் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று(26) இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் பயிற்சியின் போது ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதில் 28 வயதுடைய விமானப்படை வீரர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கல்பிட்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 19 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்