சிறிலங்கா இராணுவத்தினர் வாள்வெட்டு : தமிழர்கள் இருவர் படுகாயம்
சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட வாள்வெட்டுத் தாக்குதலில் தமிழர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் வவுனியா கரப்பு குத்தி குளத்தில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதி
சம்பவத்தில் கரப்புக்குத்தியைச் சேர்ந்த சிறீதரன் சுஜீபன் (வயது 29) என்ற இளைஞன் படுகாயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காகக் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் .

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வவுனியா கரப்பு குத்தி குளத்தில் தமிழர் ஒருவர் மீன்பிடிக்கான குத்தகையை எடுத்து மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் கரப்பு குத்தி இராணுவ முகாமைச்சேர்ந்த இராணுவத்தினர் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.
வாளால் தாக்கிய இராணுவத்தினர்
இதன்போது சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இராணுவத்தினரை குத்தகை எடுத்தவரும் அவரது நண்பரும் மறித்தவேளை இராணுவத்தினர் அவர்கள் இருவரையும் தாம் வைத்திருந்த வாளால் தாக்கியுள்ளனர்.

இதன்போது அவர்கள் இருவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மாங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.