எரிவாயு தட்டுப்பாடு- மூடப்பட்ட உணவகங்கள்!
sri lanka
hotel
closed
batticalo
kaththankudi
By Kalaimathy
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டினால் மட்டக்களப்பு காத்தான்குடியில் உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
இன்று மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி நகரங்களில் அதிகளவிலான உணவகங்கள் முற்றாக மூடப்பட்டிருந்தன.
இந்நிலையில், கடை மூடப்பட்டுள்ளது என எழுதப்பட்ட பதாதைகள் உணவகங்களுக்கு முன்னால் தொங்க விடப்பட்டுள்ளன.
இதே நேரம் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டினால் சில உணவகங்களில் விறகு அடுப்பின் மூலம் உணவு மற்றும் சிற்றுண்டிகள் தயாரிக்கும் நடவடிக்கை இடம் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டில் உணவக உரிமையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்குவதாகவும் இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள், உணவகங்களின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.






2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி