கசப்பான யதார்த்தம் எனினும் ஜனாதிபதியே பொறுப்பு
srilanka
kandy
dilum amunugama
bomb blast
By Vasanth
ஒரு நாட்டில் பயங்கரவாத செயல்கள் இடம்பெற்றால் அந்த நாட்டின் ஜனாதிபதியே அதற்கு பொறுப்பு ஏற்கவேண்டுமென இராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாளை நாட்டில் குண்டுவெடித்தால் ஜனாதிபதியும் பிரதமரும் பாதுகாப்பு செயலாளரும் முப்படைகளின் தளபதியுமே பொறுப்பேற்கவேண்டும். இது கசப்பான யதார்த்தம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் இது பொருந்தும். ஜனாதிபதி ஆணைக்குழு இதனை தெளிவுபடுத்தவேண்டியதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வேளை நாட்டின் தலைவராக இருந்தவரையே பொறுப்பாளியாக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.