26 நாட்கள் நடைபெறவுள்ள வரவு செலவு திட்டம் மீதான விவாதம் : நாடாளுமன்ற செயற்குழு அறிவிப்பு
சிறிலங்காவின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான விவாதம் 26 நாட்களுக்கு நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற செயற்குழு அறிவித்துள்ளது.
சிறிலங்காவின் நிதி அமைச்சர் என்ற வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் எதிர்வரும் 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதையடுத்து, எதிர்வரும் 14 ஆம் திகதி இந்த திட்டம் மீதான விவாதம் ஆரம்பமாகவுள்ளதுடன் தொடர்ச்சியாக ஏழு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
அத்துடன், இது தொடர்பான வாக்கெடுப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
குழுநிலை விவாதம்
இதனை தொடர்ந்து, வரவு செலவுத் திட்டம் தொடர்பான குழுநிலை விவாதம் எதிர்வரும் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் 19 நாட்களுக்கு நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற செயற்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.