மக்களை ஏமாற்றும் எரிசக்தி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்

Fuel Price In Sri Lanka Sri Lanka Imran Maharoof Lanka IOC Sri Lanka Fuel Crisis
By Kalaimathy May 26, 2022 05:42 AM GMT
Report

எரிபொருள் விலையேற்றம் குறித்து பிழையான தகவலைக் கூறி மக்களை ஏமாற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது பவியை இராஜினாமாச் செய்ய வேண்டுமென திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

எரிபொருள் விலையை திடீரென பெருந்தொகையால் அதிகரித்த எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகம் மூலம் நட்டத்தினை அனுபவித்து வருவதாகவும் அதனாலேயே பெரிய அதிகரிப்பை மேற்கொண்டதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

மக்களை ஏமாற்றும் எரிசக்தி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் | Sri Lanka Cabinet Minister Fuel Kancha Wijesekara

இந்தளவு அதிக விலை அதிகரிக்கப்பட்ட போதும் இன்னும் சிறிது நட்டம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் அனுபவிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். எரிசக்தி அமைச்சரது இந்தக் கூற்றுப் பிழையானதாகும். மக்களை ஏமாற்றும் விடயமாகும்.

இலங்கையில் ஐஓசி தனியார் நிறுவனமும் எரிபொருள் விநியோகம் செய்கின்றது. இந்த நிறுவனத்திலும் இதேவிலைக்கே எரிபொருள் விநியோகம் இடம்பெறுகின்றது. எந்தவொரு தனியார் நிறுவனமும் நட்டத்திற்கு பொருள் விற்பனை செய்வதில்லை.

மக்களை ஏமாற்றும் எரிசக்தி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் | Sri Lanka Cabinet Minister Fuel Kancha Wijesekara

எனவே, ஐஓசி இந்த விற்பனை மூலம் இலாபம் பெறுகின்றது என்பதே அர்த்தமாகும். இந்த நிலையில் எப்படி பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு மட்டும் நட்டம் ஏற்பட முடியும் என அமைச்சரைக் கேட்க விரும்புகின்றேன்.

தனியார் நிறுவனத்திற்கு இலாபம் ஏற்படும் அதேவேளை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு நட்டம் ஏற்படுகின்றதென்றால் அங்கு பிழையான நிர்வாகச் செயற்பாடுகள் இடம்பெற வேண்டும் அல்லது ஊழல் இடம்பெற வேண்டும்.

மக்களை ஏமாற்றும் எரிசக்தி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் | Sri Lanka Cabinet Minister Fuel Kancha Wijesekara

இதனை கண்டு நிவர்த்தித்தால் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்னும் சிறிது விலையைக் குறைத்து பொதுமக்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்ய முடியும். இதன் மூலம் சுமைக்கு மேல் சுமையைச் சுமக்கும் பொதுமக்களுக்கு சிறிது நிவாரணத்தை அளிக்க முடியும்.

இது தான் இன்றைய நிலையில் அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையாகும். இதனை விடுத்து பிழையான நிர்வாகச் செயற்பாடுகளால் ஏற்படும் நட்டத்தை அல்லது ஊழல் மூலம் ஏற்படும் நட்டத்தை பொதுமக்கள் மீது சுமத்துவதற்கு ஒரு அமைச்சர் தேவையில்லை.

மக்களை ஏமாற்றும் எரிசக்தி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் | Sri Lanka Cabinet Minister Fuel Kancha Wijesekara

எனவே, சரியான வெளிப்படைத் தன்மையான நிர்வாகம் செய்ய முடியாத, நாட்டு மக்களுக்கு பிழையான தகவலை வெளியிடும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும்.

இன்று இந்த நாட்டில் விலையேற்றம் செய்வதற்குத் தான் அமைச்சர்கள் உள்ளனர் என்ற கருத்து பொதுமக்களிடையே உள்ளது. அரசாங்கம் செய்யும் இந்த மோசமான செயற்பாடுகளே முழு நாடாளுமன்றத்தையும் மக்கள் பிழையாக நோக்குவதற்கு காரணமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.

ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026