நாட்டைவிட்டு தப்பியோடும் இலங்கையர்கள் - ரணில் நம்பிக்கை தரும் செய்தி

Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis
By Vanan Dec 05, 2022 04:23 PM GMT
Report

உலகின் வளர்ந்த நாடுகளுடன் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே, தனது நோக்கம் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடு நிச்சயமாக பொருளாதார சுபீட்சத்தை நோக்கி நகரும் என வலியுறுத்திய அதிபர், தாய் நாட்டை விட்டு யாரும் வெளியேறத் தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள்

நாட்டைவிட்டு தப்பியோடும் இலங்கையர்கள் - ரணில் நம்பிக்கை தரும் செய்தி | Sri Lanka Can Move Forward Says Ranil

தமது நாட்டில் தமக்கான உலகத்தை உருவாக்குவது இளைஞர்களின் பொறுப்பாகும் என்றும் அதுவே உண்மையான திறமை என்றும் அதிபர் குறிப்பிட்டார்.

2025 ஆம் ஆண்டளவில் வளமான பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு இளைஞர்கள் பங்களிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதிபர் தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் தொடர்பில் கடந்த 3ஆம் திகதி இளைஞர்களுடன் நடந்த இணையத்தள உரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அதிபர் ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

அன்று ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்தபடியாக இலங்கை இருந்தது, ஆனால் இன்று நாட்டின் பொருளாதாரம் வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு அதிகரித்துள்ளதாகவும், தற்போதுள்ள அரசியல் அமைப்பில் அவர்கள் மகிழ்ச்சியடையாததே இதற்குக் காரணம் எனவும் அதிபர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி நாட்டிற்கு பொருத்தமான பொருளாதார அமைப்பை விரைவாக அமைக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய அதிபர், கடந்த ஓகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்ட இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் மூலம் நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு கொண்டு வர முடிந்தது என்றும் கூறினார்.

பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பயணம்

நாட்டைவிட்டு தப்பியோடும் இலங்கையர்கள் - ரணில் நம்பிக்கை தரும் செய்தி | Sri Lanka Can Move Forward Says Ranil

அந்த ஸ்திரத்தன்மையின் அடிப்படையில் புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பயணம் இவ்வருட வரவு செலவுத் திட்டத்துடன் ஆரம்பிக்கும் என குறிப்பிட்டார்.

பொதுச்செலவு முகாமைத்துவம் தொடர்பான விசாரணைக்கு பதிலளித்த அதிபர் ரணில் விக்ரமசிங்க, புதிய நிதி கண்காணிப்பு குழுக்களை நியமிப்பதற்கும் நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள குழுக்களை பலப்படுத்துவதற்கும் இவ்வருட வரவு - செலவுத் திட்டத்தில் முன்மொழிந்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் நாடாளுமன்ற வரவு - செலவுத் திட்ட அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அதிபர் குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி ஒரேயடியாக ஏற்படவில்லை எனவும், நாடாளுமன்றத்தில் பல விவாதங்கள் இடம்பெற்ற போதிலும் அவ்வாறானதொரு பொருளாதார நெருக்கடி குறித்த அறிக்கையை எவரும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை எனவும் அதிபர் சுட்டிக்காட்டினார். 

ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி