சிறிலங்கா மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படும் முதலாவது வழக்கு
சிறிலங்காவிற்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உலகளாவிய உரிமைகள் இயக்கம் LLP( global Rights Compliance LLP) என்ற அமைப்பினால் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
200க்கும் அதிகமான பாதிக்கப்பட்ட தமிழர்கள் சார்பில் உலகளாவிய உரிமைகள் இயக்கம் LLP( global Rights Compliance LLP) என்ற அமைப்பினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இதேவேளை சர்வதேச சட்ட மீறல்களுக்காக இலங்கையர்கள் பலர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிறிலங்கா தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படுகின்ற முதலாவது வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.
ரோம் சாசனத்தில் சிறிலங்கா கைச்சாத்திடாத நிலையில் சிறிலங்காவிற்கு எதிராகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்ற நிலைப்பாடு நீண்ட காலமாக இருந்துள்ளது.
இந்நிலையில்
2017இல் மியன்மாருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகளைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது., அதனை அடிப்படையாக கொண்டு
சிறிலங்கா மீதும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.