தென்னை ஏற்றுமதி மூலம் மில்லியன் டொலர் வருவாய்...! வெளியான தகவல்
Sri Lanka
Economy of Sri Lanka
Dollars
Coconut price
By Shalini Balachandran
இதுவரை தென்னை ஏற்றுமதி மூலம் 514 மில்லியன் டொலர் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் சாந்த ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
தென்னை அறுவடை அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதிக்கான தேவை அதிகரிப்பு ஆகியவையே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
தேங்காய் ஏற்றுமதி
இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக அண்மையில் தேங்காய் அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்திருந்தது.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருவாய் 21 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |