மேலும் 175 கொவிட் மரணங்கள் பதிவு
sri lanka
corona-death
By Vanan
இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளாகி மேலும் 175 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவரத்ன உறுதிப்படுத்தியுள்ளார்.
குறித்த அனைவரும் நேற்றைய தினம் (08) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரது எண்ணிக்கை 10,864 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 476,726 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.